12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் வரும் 31 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் மதிப்பெண் பட்டியலினையும் பெற்றுக்கொள்ளலாம்.