விடாமுயற்சியோடு 51 வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று கரூரை சேர்ந்த பெண் அசத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகிலா பானு. 51 வயதான இவர் 1989ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவித்திருக்கிறார்.
34 ஆண்டுகளை தாண்டியும் தனது கல்வி வேட்கையை தணியாமல் காத்து வந்திருக்கிறார் ராகிலா பானு. இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஐந்து பாடங்களுக்கும் தேர்வு எழுதி இருந்தார். இதில் இரண்டு பாடங்களில் மட்டுமே அவரால் தேர்ச்சி பெற முடிந்தது. இருந்த போது சளைக்காத ராகிலா பானு கடந்த 3 ந் தேதி துணைத்தேர்வில் மீதம் உள்ள மூன்று பாடங்களுக்கும் தேர்வு எழுதியுள்ளார். இதில் 3 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
இதன் மூலம் 34 ஆண்டுகளுக்கு முன் நின்று போன தனது கல்விகனவை தற்போது மீண்டும் நினைவாகி 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று ராகிலா பானு அசத்தியிருக்கிறார்.







