கத்தாரில் கால்பந்து ரசிகர்களின் வருகைக்காக என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது, வெளிநாட்டவர்களைக் கவரும் வகையில் சிறப்பம்சத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விடுதிகள் குறித்து விரிவாக காணலாம்.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, இந்த வருடத்திற்கான உலகக் கோப்பை தொடரை நடத்த ஃபிஃபா அனுமதி வழங்கிய அடுத்து நிமிடமே, போட்டிகளை நடத்தவும், உலகெங்கிலும் இருந்து ரசிகர்களை வரவேற்கவும் கத்தார் ஆயத்தமானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2010ஆம் ஆண்டு முதலே, கட்டுமானங்கள் தொடங்கி பொழுதுபோக்கு வரை பல திட்டங்களை வகுத்த கத்தார், ரசிகர்களுடைய வசதிக்காக பல ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கியது. கத்தார் அரசு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள் பலவும், கத்தாரில் முதலீடு செய்ய தொடங்கின.
கத்தாரில் முதல் முறையாக 3 ஃப்லோட்டிங் ஷிப்ஸ், அதாவது மிதக்கும் கப்பல்கள், விருந்தினர் அறைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் இருக்கும் துறைமுகப் பகுதியில் இந்த மிதக்கும் கப்பல்கள், விருந்தினர்களை வரவேற்கின்றன. கிட்டதட்ட 6,400 அறைகளுடன், 2,626 விருந்தினர்கள் தங்கும் வசதியுடன் இந்த கப்பல்களில் உயர்தரத்திலான எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சுவையான உணவுகள், மதுபானக் கூடங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்கங்கள், விளையாட்டு திடல்கள் என பல அம்சங்களும் இதில் அடங்கும். குறிப்பாக கத்தாரில் விருந்தினர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”பேன் வில்லேஜ்” கிராமம், வெளிநாட்டவர்களை தற்போது வெகுவாக கவர்ந்துள்ளது. கடற்கரை மணற்பரப்புகளில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த அரபு கூடாரங்கள் மாதிரியான தங்கும் விடுதிகளுக்காக, வெளிப்புர பகுதியில் மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு புறம் கண்டெய்னர் கேம்ப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர் அறையில் தங்குவதற்கு, ஒரு இரவுக்கு 207 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுபோன்று கத்தாரில் ஏராளமான இடங்களில், ரசிகர்களின் வசதிக்காக குறைவான மற்றும் உயர் தரத்திலான தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம்தான் இருந்தாலும், கத்தாருடைய விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால், அறைகளுக்கு செலவு செய்வதைவிட இரண்டு மடங்கு பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.