வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் ‘அரசன்’. வட சென்னை யூனிவர்சில் உருவாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அரசன் படத்தின் புரோமோ அக்டோபர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு சில திரையரங்குகளிலும் அக்டோபர் 17ல் யூடியூப்பிலும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.







