மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

மல்யுத்தப்போட்டியில் ராணிப்பேட்டையை சேர்ந்த 16 வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில்  கை மல்யுத்த மாநில சாம்பியன்ஷிப்…

மல்யுத்தப்போட்டியில் ராணிப்பேட்டையை சேர்ந்த 16 வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில்  கை மல்யுத்த மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில் சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர், ராணிப்பேட்டை , மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 250 வீரர்கள்  போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்  மல்யுத்த போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வீரர்கள் தங்கம், 5 வீரர்கள் வெள்ளி 3 வீரர்கள் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் மாநில போட்டியில் எவர் ஆல் ரன்னர் பரிசும் பெற்று வந்துள்ளனர்.

மல்யுத்த போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் ராணிப்பேட்டை அசோசியேஷன் தலைவர் யுவராஜ், செயலாளர் அஜித்குமார் மற்றும் ஒலிம்பிக் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.