நாக சைதன்யாவை கடுமையாக விமர்சித்ததாக வெளியான செய்திக்கு நடிகை சமந்தா விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போதிருந்து, படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் நாக சைதன்யாவைப் பற்றி காதல் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. மேலும் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின. நடிகை சமந்தா கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மாயோசிட்டிஸ் பிரச்னை காரணமாக அவதிப்பட்டார். ஒருவழியாக தற்போது தன்னுடைய உடல்நல பிரச்னையில் இருந்து மீண்டு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.
நடிகர் நாகசைதன்யா, சமீபகாலமாகவே பொன்னியின் செல்வன் நடிகை
சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட சமந்தாவிடம், நாக சைதன்யாவின் காதல் பற்றி கேட்கப்பட்டதாகவும் அதற்குப் பதிலளித்த சமந்தா, யார், யார் கூட டேட்டிங் செய்தால் எனக்கு என்ன? நான் எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்தபட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என தெரிவித்ததாக கிரேட் ஆந்திரா என்ற இதழ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
I never said this!! https://t.co/z3k2sTDqu7
— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023
இதையடுத்து, சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவிய இந்த ட்விட் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு முதல் முறையாக நடிகை சமந்தா இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார். அத்துடன் நான் அவ்வாறு கூறவே இல்லை எனவும் அவர் மறுப்பு தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.