நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள துர்கா செல்வம் என்ற வாசனை பொருட்கள் கடையில் மின் கசிவு காரணமாக மூன்று மாடி கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது.
நாகர்கோவில் மாநகராட்சி செல்லும் பாலமோர் சாலையில் மூன்று மாடி கட்டிடத்தில் துர்கா செல்வம் என்ற நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் பூஜை பொருட்கள் பத்தி, சாம்பிராணி, பாக்கு தட்டு, பூஜை பொருட்கள் விற்பனை செயல்பட்டு வந்தன.
வியாபாரத்தை முடித்து விட்டு உணவு மதியம் 3 மணி இடைவேளையில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்துடன் தீ எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் வந்த தீயணைப்பு வீரர்கள், கடையின் சட்டர் பூட்டை உடைத்து சட்டரை துக்கினர். அப்போது எரிந்து கொண்டிருந்த தீ பயங்கரமாக வெளியேறியது. மேலும் கட்டிடம் முழுவதும் மளமளவென தீ பற்றி எரிந்தது இதில் மூன்று லட்சம் மதிப்புடைய பூஜை பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் எரிந்து நாசமாகின.
அந்த நேரத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அருகாமையில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
—-ம.ஶ்ரீமரகதம்







