ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
30 வருடங்களாக இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் 56வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரோஜா படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரஹ்மான், தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். 6 தேசிய விருதுகள், 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமிய விருதுகள் என பல்வேறு விருதுகளை பெற்று இசை உலகில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று ‘கற்றார்’ (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும். இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார் என்பதை அடிப்படையாக கொண்ட குரலான
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.(குறள்)
என்பதை அடிப்படையாக கொண்டு இந்த புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.இந்த ‘கற்றார்’ என்ற புதிய டிஜிட்டல் தளம் இன்னும் 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
I’m excited to announce today – KATRAAR, the #metaverse platform currently in development, is one step closer to launching. And I look forward to sharing this journey with you all.
➡️ https://t.co/1XP04zo0Lr@HBAR_foundation @MyQyuki #NFTs #Web3 pic.twitter.com/Un0fGSzxdl
— A.R.Rahman (@arrahman) January 6, 2023









