சேலை அணிந்து வர அனுமதி மறுப்பு: ஓட்டலை மூட மாநகராட்சி நோட்டீஸ்

சேலை அணிந்து வர அனுமதி மறுத்த உணவகத்தை 48 மணிநேரத்துக்குள் மூடுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில், அன்சல் பிளாசாவில் அகியூலா (Aquila) என்ற ரெஸ்டாரெண்ட் இயங்கி வந்தது. இங்கு கடந்த மாதம் அனிதா…

சேலை அணிந்து வர அனுமதி மறுத்த உணவகத்தை 48 மணிநேரத்துக்குள் மூடுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில், அன்சல் பிளாசாவில் அகியூலா (Aquila) என்ற ரெஸ்டாரெண்ட் இயங்கி வந்தது. இங்கு கடந்த மாதம் அனிதா சவுத்ரி என்ற பெண் புடவை அணிந்து சென்றார். அவரை தடுத்த ஊழியர்கள், ‘மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவார் கள்’ என்று தெரிவித்ததாகவும் புடவை கட்டி வந்தால் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய தாகவும் அனிதா கூறியிருந்தார்.

இதுபோன்ற அவமரியாதையை எங்கும் சந்தித்ததில்லை என்றும் இது மிகுந்த வேதனை யை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். இதுகு றித்து, ஊழியரிடம் அவர் பேசும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த நடிகைகள் ரிச்சா சதா, மீரா சோப்ரா உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த ரெஸ்டாரண்ட் நிர்வாகம் அதை மறுத்து விளக்கத்தையும் அது தொடர்பான வீடியோவையும் வெளியிட் டது.

இந்நிலையில் தெற்கு டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அப்போது, அந்த உணவகத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு செய்தபோது உரிமம் பெறாமல் அந்த உணவகம் செயல்பட்டு வருவதும் சுகாதாரமற்ற நிலையில் உணவுகள் தயார் செய்யப் படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 48 மணி நேரத்துக்குள் உணவகத்தை மூட தெற்கு டெல்லி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.