இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வந்தது. இதன்படி நேற்று முன் தினம் இருபதாயிரத்துக்கும் கீழாக குறைந்தது. நேற்று 18,870 பேருக்கு…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வந்தது. இதன்படி நேற்று முன் தினம் இருபதாயிரத்துக்கும் கீழாக குறைந்தது. நேற்று 18,870 பேருக்கு பாதிப்புகள் குறைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் திடீரென அதிகரித்து 23,529 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

கேரளாவில் மட்டும் 12,161 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,37,39,980 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 311 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக் கை 4,48,062 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 28,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற் றுக்கு 2,77,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 88,34,70,578 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 65,34,306 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.