முக்கியச் செய்திகள் இந்தியா

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 21 பயணிகள் இருந்தனர்.

பேருந்து, கிழக்கு காரோ மற்றும் மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லை அருகே  அதி காலை வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நோங்ச்ராம் பாலத்தில் இருந்து ரிங்டி ( Ringdi) ஆற்றில் விழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், மீட்பு பணியில் ஈடு பட்டனர். இதில், பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயரிந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் சுவரின் மோதி கவிழ்ந்ததாக பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

மேகதாது: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கும் அனைத்துக் கட்சி குழு

Ezhilarasan

ஜேஇஇ 3-ம் கட்ட தேர்வுகள் இன்று தொடங்கியது

Gayathri Venkatesan

ஸ்புட்னிக்-v தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Halley karthi