Piaggio நிறுவனம் Aprilia SXR 160 என்ற பிரீமியம் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது.
http://www.shop.apriliaindia.com என்ற இணையதளம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். புனேவிலுள்ள புராமதி ஆலையில் Aprilia SXR 160 ஸ்கூட்டரின் உற்பத்தி தொடங்கியது. இவை இந்தியாவுக்காக பிரத்யேகமாக இத்தாலியில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனம் ஒரு சிறந்த சவாரி அனுபவத்தை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 cc BS6 கொண்ட இதில், LED ஹெட்லைட்கள், LED டெயில்லைட்கள், டிஜிட்டல் கிளஸ்டர், மொபைல் இணைப்பு வசதி, பெரிய இருக்கை, சரிசெய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன், ABS உடன் கூடிய டிஸ்க் பிரேக், Aprilia-ன் தனித்துவமான கிராபிக்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் காணப்படுகின்றன.
இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட இது, இதுவரை இல்லாத அளவு அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் சிவப்பு, ப்ளூ, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 2020ம் ஆண்டில் நிறைய சவால்கள் இருந்தாலும், உரிய நேரத்தில் இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக Piaggio நிறுவன தலைவர் டியாகோ கிராஃபி தெரிவித்துள்ளார்.







