கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலை வரும் சூழலில் அங்கு ஆயிரக்கணக்கான கேரளா மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
மிகக் குறைந்த அளவிலேயே விமான சேவை மற்றும் கட்டுக்கடங்காத விமான கட்டண உயர்வு காரணமாக முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பணிக்காக அங்கு சென்ற எளிய மக்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே மத்திய அரசு தலையிட்டு விமான சேவையையும் அதிகரிக்கவும், விமான கட்டண உயர்வை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை அழைத்து வர முன்னுரிமை அளிக்க ஒரு மையப்படுத்தப்பட்ட பதிவு முறையை ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல, பயணத்தின் நடுவில் சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வரவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.







