தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், 33 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், மகேஷ்வரன், தட்சிணாமூர்த்தி, அஜய்யாதவ், நிர்மல்ராஜ், கோவிந்தராவ், மகேஷ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 மாவட்ட வருவாய் அலுவலர்களும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: நலம் விசாரித்த முதலமைச்சர் – அமைச்சரின் நெகிழ்ச்சிப் பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் தமிழ்நாட்டில், சூடுபிடித்துள்ள இந்த சூழ்நிலையில் தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.