பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பெகாசஸ் மென்பொருள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோதே பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதாக பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பெகாசஸ் மென்பொருள் மூலம் ராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அண்மைச் செய்தி: தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
மேலும், பெகாசஸ் மென்பொருள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் உட்பட பலரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது தேசத்துரோகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








