மத்திய அரசின் தேர்வுகளை ஒத்தி வைக்க வலியுறுத்தி கண்களில் கருப்புத்துணி கட்டி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் ரயில்வே தேர்வில் முறைகேடுகளை களைய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், கொரோனா பரவல் காரணமாக வங்கி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் போராட்டத்தில் மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹசன் மெளலானா, மத்திய அரசின் கல்விக்கொள்கையால் தமிழ்நாடு மாணவர்கள் மங்கிப் போய்க் கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வரும், சூழ்நிலையில் இந்த போராட்டம், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.