ஆடுகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தைகள் – அச்சத்தில் பொதுமக்கள்!

உதகை அருகே, மேல் காந்திநகர் பகுதியில் குடியிருப்பின் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு ஆடுகளை, சிறுத்தைகள் வேட்டையாடிச் செல்வதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மேல் காந்திநகர் பகுதியில் விசித்ரா…

உதகை அருகே, மேல் காந்திநகர் பகுதியில் குடியிருப்பின் அருகே
மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு ஆடுகளை, சிறுத்தைகள் வேட்டையாடிச் செல்வதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மேல் காந்திநகர் பகுதியில் விசித்ரா என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் மேய்ச்சல் நிலத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது மேய்ச்சல் நிலத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய இரு சிறுத்தைகள் இரண்டு ஆடுகளை வேட்டையாடி வாயில் கவ்விகொண்டு
சென்றுள்ளது.

உடனடியாக விசித்ரா கூச்சலிட்டுள்ளார். ஒரு சிறுத்தை ஆட்டை வனப்பகுதிக்குள் கவ்வி சென்ற நிலையில், மற்றொரு சிறுத்தை ஆட்டை மேய்ச்சல் நிலத்தில் விட்டு விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில், நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகள் வந்து, ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு பிராணிகளை சிறுத்தைகள் வேட்டையாடி வந்தது.

ஆனால், தற்போது பகல் நேரங்களிலேயே குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகள்
உலா வந்து, வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி செல்வதால் குடியிருப்பு
வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், குடியிருப்பின் அருகே உலா வரும்
சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்கணித்து, குண்டு வைத்து பிடித்து அடர்ந்த
வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள்
வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.