ஆப்பிளின் புதிய AI… வெளியான அப்டேட்!

ஆப்பிள் நிறுவனம் எம்ஜிஐஇ (MGIE) என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.   உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை…

ஆப்பிள் நிறுவனம் எம்ஜிஐஇ (MGIE) என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.  

உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில் ஆப்பிளிள் நிறுவனம் எம்ஜிஐஇ (MGIE) என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.  இந்த ஏஐ சிரமமான வேலைகளை எளிதாக செய்யும்.  இது மற்ற ஏஐ-கள் போல் இல்லாமல், சற்று புதுமையானது.  அதாவது எழுத்து மூலம் புகைப்படங்களை உருவாக்கும் ஏஐ-கள் நிறைய உள்ளன.  ஆனால் இந்த ஏஐ எழுத்து மூலம் புகைப்படங்களை எடிட் செய்யும்.

அதாவது ஒரு புகைப்படத்தைக் கொடுத்து அதில், என்ன மாற்றம் செய்ய வேண்டுமென இயல்பான மொழியில் சொன்னால் போதுமானது.  இந்த ஏஐ அதை எடிட் செய்கிறது.
இந்த ஏஐ க்ராப், ரொட்டேட், ஸ்டைல், டெக்சர் போன்ற எடிட்டிங்குகளை சிறப்பாக மாற்றுகிறது.

இந்த ஏஐ தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பெரும்பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.  மேலும், மற்ற ஏஐ-களைப் போல செயலி வடிவிலோ, இணையதளம் வாயிலாகவோ இதைப் பயன்படுத்த இன்னும் வழிவகை செய்யப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.