சீனாவில் ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டியில் ஐபோன் 13 புரோ போனை ஹேக்கர் குழு 15 நெடிக்குள் ஹேக் செய்து சாதனை படைத்துள்ளது.
சீனாவில் எல்லா வருடமும் ஹேக்கர்கள் பங்கேற்கும் போட்டி ‘தயின்ஃபூ கப்’ ( Tianfu Cup) நடைபெறும். ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் மொபைல்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை யார் வேகமாக ஹேக் செய்கிறார்களோ அவர்கள்தான் இந்த போட்டியின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த ஆண்டு சீனாவின் செண்டு ( Chengdu) மாகாணத்தில் ‘தயின்ஃபூ கப்’ போட்டி நடைபெற்றது. இதில் ஐபோன் 13 புரோ போனை ’குன்லுன்’ என்ற ஹேக்கர் குழு 15 நொடிகளுக்குள் ஹேக் செய்தது. இக்குழுவைப்போல பல குழுக்கள் ஹேக் செய்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.