தமிழகம் முழுவதும் 12 அரசு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 15 அரசு அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்துறை, மின்வாரியம், பத்திரப்பதிவு அலுவலகம், போக்குவரத்து துறை, உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த 60 அரசு அலுவலகங்களில் சோதனை செய்வதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்மைச் செய்தி: திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் – 5 பேர் கைது
கடலூர், தேனி, நாகை, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.







