முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

பிரைமில் வெளியாகும் பதான் திரைப்படம் – ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி அறிவிப்பு

ஷாருக் கான் நடித்து பான் இந்தியா படமாக வெளியாகி வசூலை குவித்த பதான் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாலிவுட்டின் தற்போதைய சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான்.  கடந்த 2018-ம் ஆண்டு ஷாருக் கான் நடித்து வெளியான  ஜீரோ என்கிற திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட
ஷாருக்கான், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ‘பதான்’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும், சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பல்வேறு  எதிர்ப்புகளுக்கு இடையே, உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது. சமீபமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்ததால் பதான் படத்தின் முடிவுகள்  பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது.

அந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் விதமாக, இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான பதான் வசூலை குவித்து, தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது.

வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூலித்த இத்திரைப்படம், அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் தொடந்து முன்னேற்றத்தையே கண்டது. இந்நிலையில், தற்போது இப்படம் வெளிவந்து 27 நாட்களிலேயே ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. இதில் இந்திய அளவில் 623 கோடியும், வெளிநாடுகளில் 377 கோடியும் இப்படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

இதனையும் படியுங்கள்: இவரைதான் காதலிக்கிறாரா தமன்னா?…

மேலும் இந்த ஆண்டு ரிலீசான இந்திய திரைப்படங்களில் 1000 கோடி என்கிற மைல்கல் சாதனையை நிகழ்த்திய முதல் படம் என்கிற பெருமையை பெற்ற ”பதான்” , இதுவரை வெளிவந்துள்ள இந்திய படங்களில் அதிக வசூல் சாதனை செய்த பட்டியலில் தற்போது 5-ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பதான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதியை பதான் படக்குழு அறிவித்துள்ளது. பதான் படத்தை பிரபல ஓடிடி தளமான “அமேசான் பிரைம்” நிறுவனம் வெளியிடுகிறது. இந்த மாதம் 22ம் தேதி பதான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்வி பயில பணம் தடையாக இருக்கக்கூடாது- முதலமைச்சர்

G SaravanaKumar

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Gayathri Venkatesan

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Dinesh A