முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு சோதனை- ஆர்.பி.உதயகுமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள்
எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான 39 இடங்களில்
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இச்சோதனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை மறைக்கவே திமுக இந்த சோதனைகளை நடத்தி வருகிறது.

எத்தனை சோதனைகள் நடத்தினாலும் அனைத்தும் சட்ட ரீதியாக எதிர்க் கொள்ளப்படும். முன்னாள் அமைச்சர்கள் சோதனைகளுக்காக மனம் தளராமல் கட்சி பணியாற்றுவர்கள். கண்ணியமிக்க காவல்துறை திமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி வருகிறது. அதிமுகவின் செல்வாக்கை சரிக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை, லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னனியில் திமுகவின் திட்டம் கானல் நீராக போகும். பகல் கனவு பலிக்காது. சோதனை என்கிற பெயரில் காவல்துறை தவறாக வழி நடத்தப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டம்

Web Editor

2024 தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் சோனியா

EZHILARASAN D

அண்ணா நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Halley Karthik