முக்கியச் செய்திகள் கட்டுரைகள் விளையாட்டு

கிரிக்கெட் உலகின் கிங் சுனில் கவாஸ்கர்


கிருத்திகா

சர்வதேச ஆடுகளங்களை அதிரவைத்த கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்த தினம் இன்று…

இந்திய கிரிக்கெட் வீரர்களில், தனது முத்திரைப்பதிக்கும் விளையாட்டால், சர்வதேச அரங்கங்களை அதிர வைத்தவர் சுனில் கவாஸ்கர். 1949ஆம் ஆண்டு பிறந்த கவாஸ்கருக்கு, தான் ஒரு மல்யுத்த வீரராக வேண்டும் என்பதே சிறு வயது விருப்பமாக இருந்தது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், அவரது மாமா மாதவ் மந்திரி, மைத்துனர் ஜி.ஆர். விஸ்வநாதன், ஆகியோர் இந்திய அணியில் விளையாடியதால், அதுவே கவாஸ்கருக்கும் வந்து சேர்ந்தது. பள்ளிப்பருவதில் கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக கவனம் ஈர்க்காத கவாஸ்கர், தேசிய போட்டிகளில் கவனம் ஈர்த்ததால், 1966-67களில் முதல் தர போட்டிகளில் விளையாட தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்தே, 1971ம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கவாஸ்கர், அறிமுக தொடரிலேயே 774 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தார்.

125 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 122 ரன்களை குவித்த கவாஸ்கர், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமைக்குரியவரானார். சச்சினுக்கு முன்பு வரை உலகில் அதிக சதம் அடித்த வீரராக வலம் வந்தார். 34 சதம் அடித்தவரின் சாதனையை ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு யாரும் முறியடிக்கவில்லை. இவற்றில் பெரும்பாலான சதங்கள் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராகவே எடுக்கப்பட்டவை. உலகில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த முதல் வீரரும் இவர்தான்.

ஆண்டுக்கு 1000 ரன்கள் என மூன்று முறை இந்த சாதனையை அரங்கேற்றிய கவாஸ்கர், 18 வெவ்வேறு கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து 58 முறை பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச் பிடித்த முதல் இந்தியர், ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை என 100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமையை தக்கவைத்திருக்கிறார் கவாஸ்கர்.

எப்படிப்பட்ட மைதானமாக இருந்தாலும், தலைக்கவசம் அணியாமல் அசால்ட் செய்பவர் கவாஸ்கர், கிரிக்கெட் அணித் தலைவராக அணியை பல்வேறு இக்கட்டாண தருணங்களில் வழிநடத்திய அனுபவம் மிக்கவர். பல்வேறு வெற்றிகளை பெற்றுத்தந்த கவாஸ்கர், 1987ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அலங்கரித்திருக்கிறார் கவாஸ்கர்.

தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக இருந்து, கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் கவாஸ்கர். இவருக்கு பதம்பூஷன் விருந்து தந்து கெளரவித்தது மத்திய அரசு, விளையாட்டுலகின் உயரிய விருதான அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதான ‘கர்னல் சி.கே.நாயுடு விருது உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ள கவாஸ்கரின் சாதனைகளில் பல இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Janani

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முதலில் வேட்புமனு பெற்றார் சசி தரூர்

EZHILARASAN D

இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்;  உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!

Yuthi