புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு HMPV தொற்று உறுதி !

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப் நியூமோ வைரஸ் (ஹெச்.எம்.பி.வி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஹெச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 வயது சிறுமி தொடர் காய்ச்சல், சளி, இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு HMPV சோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே ஜிப்மர் மருத்துவமனையில் 5 வயது சிறுமி ஒருவர் HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நலமுடன் வீடு திரும்பினார். இதன்மூலம் புதுச்சேரியில் இரண்டு குழந்தைகளுக்கு இதுவரை HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.