மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லுாரியில் ஆண்டுவிழா!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லுாரியில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஆண்டுவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லுாரியில் நுண்கலை மன்ற விழா மற்றும்…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லுாரியில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஆண்டுவிழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லுாரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் ஆண்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் முனைவர் காமராசு, காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர் அரசு கல்லுாரி முதல்வர் முனைவர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கல்லுாரியில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருத்தினர்களால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.