குவைத்தில் சிக்கியுள்ள 35 தமிழர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு

குவைத்தில் சிக்கியுள்ள 35 தமிழர்களையும் குவைத் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்திலிருந்து குவைத்திற்கு 35 தமிழர்கள் கடந்த மாதம் 4 ஆம் தேதி பணிக்கு சென்றனர். குவைத்…

குவைத்தில் சிக்கியுள்ள 35 தமிழர்களையும் குவைத் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்திலிருந்து குவைத்திற்கு 35 தமிழர்கள் கடந்த மாதம் 4 ஆம் தேதி பணிக்கு சென்றனர். குவைத் நிறுவனம் 35 தமிழர்களையும் கொத்தடிமைகளாக வைத்து உள்ளதாகவும், சிக்கியுள்ள 35 தமிழர்களையும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

 

மேலும் குவைத்தில் சிக்கியுள்ள 35 தமிழர்களையும் தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனிடையே, 35 தமிழர்களையும் குவைத் நிறுவனம் பணி நீக்கம் செய்து விட்டதாக திடீரென கடிதம் வழங்கியுள்ளது. குவைத் தொழில் நிறுவனங்களின் சட்ட விதிமுறைகளை தமிழர்கள் மீறியதாக குவைத் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட கடிதத்தில் 35 தமிழர்களும் ஒப்புகை கையெழுத்திட வேண்டும் என குவைத் நிறுவனம் வற்புறுத்தியதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என நியூஸ் 7 தமிழ் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் பகுதி வாயிலாகவும் தமிழர்களை மீட்க வேண்டும் என்றும் அவர்களின் உறவினர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.