முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

21-ம் நூற்றாண்டு நவீன வசதிகளையும் வீடு வீடாக எடுத்து செல்கிறோம் – பிரதமர் மோடி உரை

20-ம் நூற்றாண்டின் தேவைகள் மட்டும் இன்றி 21-ம் நூற்றாண்டு நவீன வசதிகளையும் வீடு வீடாக எடுத்து செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இமாச்சல பிரதேச மாநிலம் உனா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல அவர் உனாவில் உள்ள ஐ.ஐ.டி.யை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதோடு மருத்துவ பூங்காவுக்கு அடிக்கல்லும் நாட்டினார். பின்னர் சம்பா பகுதியில் 2 நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கிராம சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

4-வது வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிறகு உனாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இமாச்சல பிரதேசத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்கள் முதல் முறையாக சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம், கிராமங்களில் 3,000 கி.மீ சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் சம்பா மற்றும் பிற பழங்குடியின கிராமங்கள் பயனடையும் என்றார்.

 

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இமாச்சல பிரதேசத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பரிசுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் 20ஆம் நூற்றாண்டின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், 21ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகளையும் வீடு வீடாக எடுத்துச் செல்கிறோம் என குறிப்பிட்டார்.

மருந்து, கல்வி மற்றும் ரெயில்வே திட்டங்கள் பிராந்தியத்தின் முன்னேற்றத்தால் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை எனது அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளின் வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இதற்கு முந்தைய அரசுகள் மக்களுக்கு வசதிகளை வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

 

மருந்து பூங்காவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் இமாச்சல பிரதேசத்தில் மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி நடைபெறும்போது மருந்துகள் மலிவாகிவிடும் என தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலின் 3-வது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும், மராட்டியத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றம்

Halley Karthik

ஐபிஎல்: சி.எஸ்.கே. அணியில் மீண்டும் டுவைன் பிராவோ

G SaravanaKumar

“மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான்” – அண்ணாமலை

Halley Karthik