குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகச்சியில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபக்தா எல் சிசி கலந்து கொள்ளவுள்ளார். இந்த விழாவில் ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் சிறந்த சேவைக்கான குடியரசு தலைவரின் காவலர்களுக்கான விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விருது பெறும் காவலர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி. பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.







