அண்ணாவின் 55-வது நினைவு தினம் – திமுகவினர் அமைதிப் பேரணி!

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அமைதிப் பேரணி நடத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விடுதி…

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அமைதிப் பேரணி நடத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விடுதி அருகில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.  அமைதிப் பேரணியில் அமைச்சர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கருப்புச்சட்டை அணிந்து பங்கெடுத்தனர்.  பேரணியாக சென்ற திமுக‌ பொருளாளர் டி ஆர் பாலு,  திமுக துணை பொதுச் செயலாளர்கள் அ.ராசா எம்.பி, கனிமொழி எம்பி,  அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  ஐ பெரியசாமி, கே என் நேரு,  எ.வ வேலு,  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  மா சுப்பிரமணியன், காந்தி,  செஞ்சி மஸ்தான்,  சாமிநாதன்,  கயல்விழி செல்வராஜ் , சி வெ கணேசன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

இதனைத் ஹொடர்ந்து தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.