அண்ணாமலையார் கோயிலில் திருக்கல்யாண விழா! – திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

திருவண்ணாமலை கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாளுக்கு  திருக்கல்யாண விழா நடைபெற்றது. பஞ்சபூத  தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண…

திருவண்ணாமலை கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாளுக்கு  திருக்கல்யாண விழா நடைபெற்றது.

பஞ்சபூத  தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவ விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி குமர கோயிலுக்கு சென்று அம்மனுக்கு பெண் அழைப்பு விடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து அம்பாள் அண்ணாமலையார் ஆலயத்திற்கு வந்த பிறகு  மாலை மாற்றும் நிகழ்வை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்பாளுக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் திருக்கல்யாண வைபவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என கோஷம் மிட்டு சாமி தரிசனம் செய்து வந்தனர்.

—கோ. சிவசங்கரன்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.