”கலைஞரின் பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகி இருக்க மாட்டார் “ – அ.ராசா எம்பி பேச்சு..!!

கலைஞரின் பேனா இல்லை என்றால் பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகி இருக்க மாட்டார் என்றும், எடப்பாடி பழனிச்சாமி பி.ஏ படித்திருக்க மாட்டார் எனவும் திமுக எம்பி அ.ராசா விமர்ச்சித்துள்ளார். திருநெல்வேலியில் கலைஞர் நூற்றாண்டு…

கலைஞரின் பேனா இல்லை என்றால் பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகி இருக்க மாட்டார் என்றும், எடப்பாடி பழனிச்சாமி பி.ஏ படித்திருக்க மாட்டார் எனவும் திமுக எம்பி அ.ராசா விமர்ச்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜோதிபுரம் திடலில் நடைப்பெற்றது. இதில் சிறப்புரையாற்றிய திமுக துணைப் பொதுசெயாளரும், எம்பியுமான அ.ராசா, கலைஞரின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..

” முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பன்முகத்தன்மை என்பது உலகில் எந்த தலைவருக்கும் இதுவரை இல்லை. குறிப்பாக அவர் கொண்டு வந்த
திட்டத்தால் தமிழகத்தில் இதுவரை, பயன்பெறாதவர்கள் என்று யாரும் இருக்க
முடியாது.

தற்போது மக்கள் பணத்தில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைக்க
தமிழகத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விவசாயிகளுக்கு இலவச
மின்சாரத்தை கொடுத்த பேனா, கலைஞர் பேனா ,  கவுண்டர் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து கல்வியில் இடஒதுக்கீடு கிடைக்க செய்த பேனா கலைஞர் பேனா.

கலைஞரின் பேனா கையெழுத்திடவில்லை என்றால், பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகி இருக்க மாட்டார்  அதேபோல எடப்பாடி பழனிச்சாமி பி.ஏ படித்திருக்க மாட்டார்.  அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே முதன் முதலில் கைகளால் ரிக்சா
இழுந்தவர்களுக்கு சைக்கிள் ரிக்சா கொடுக்க வைத்த பெருமை கலைஞரின் பேனாவுக்கு உண்டு.

அம்பானியுடன் செய்த ஊழல்களை மறைப்பதற்காக பிரதமர் மோடி தேசப்பக்தி வேஷம் போடுகிறார். மதவாதமும், ஊழலும் ஒன்றாக கைகோர்த்து வருவதை
எதிர்கின்ற தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார் ” என அ.ராசா எம்பி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.