துரோகத்தில் மூழ்கியவர் எடப்பாடி பழனிசாமி என இப்பொழுதுதான் அண்ணாமலைக்கு புரிந்திருக்கும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
சிவகங்கை சுற்று வட்டாரச் சாலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை
பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சார்பில்
எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். எடப்படி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட அணியினர் கருப்பு பலூன்களை மேலே பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதிமுக 8 முறை தோல்வியை சந்தித்ததற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம். அதிமுகவை பிளவுபடுத்தவே எடப்பாடி பழனிசாமியை பிணைய கைதியாக திமுக வைத்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியை திமுக காப்பாற்றி வருகிறது. தற்போதைய முதல்வர் தேர்தல் அறிக்கையாக கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளி எடப்பாடி என எங்களுக்கே தெரிவித்த அவர் ஆட்சி அமைந்த பின் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்து விட்டு ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டாகியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மோதல் குறித்த கேள்விக்கு ஆட்சியில் அமரவைத்த சசிகலாவிற்கே துரோகம் விளைவித்தவர் எடப்பாடி. பழனிசாமி அவரை நம்பிச் சென்ற அண்ணாமலைக்கு தற்போது புரிந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
-ம.பவித்ரா