தமிழகம் செய்திகள்

அண்ணாமலையை 24 மணி நேரத்தில் கைது செய்தார்களா? -குஷ்பூ கேள்வி

அண்ணாமலை 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என்றார். முடிந்தால் கைது செய்யாதிருக்கலாமே என பேசிய  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பேசியுள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது  காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ,

திமுகவை பார்த்து கேட்கிறேன்,  யாரைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள் என்று கூறினீர்கள். அவர் பார்க்காத கேசா. அவர் என்ன சட்டம் தெரியாதவரா? சட்டத்தை படித்து அந்த துறையிலே வேலை பார்த்தவர் தான் அண்ணாமலை. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்றால் பாஜகவால் தான் முடியும். இது தானாக சேரும் கூட்டம். காசு கொடுத்துக் கூட்டிய கூட்டம் அல்ல.

வட மாநில மக்கள் குறித்துப் பேசியது யார்?. பானி பூரி விற்கத்தான் லாயக்கு என்றது யார்?. கக்கூஸ் கழுவுவதுதான் இவர்கள் வேலை என சொன்னது யார்? இந்தி தெரியாது போடா என்றது யார்?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்ணாமலை மீது உள்ள நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. திமுக அரசுக்கு திராணி இருந்தால் என்னை 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என்றார். அவரை கைது செய்ய வேண்டியதுதானே? அவர் எதற்கும் அஞ்ச மாட்டார். பயம் என்பது பாஜக டிஸ்னெரியில் இல்லை. மடியில் கனம் இருந்தால் தானே பயம் இருக்கும். எந்த ஊழலும் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு உள்ளது. தமிழ் மக்கள், தமிழகம், தமிழ் மொழி என பிரதமர் பேசி வருகிறார். ஆனால் இங்கே இந்தி திணிப்பு என மக்களைத் திசை திருப்புகிறார்கள். நீங்கள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 2வது மொழியாக இந்தி உள்ளது.

பிரதமர் ஆகும் ஆசை உள்ளவர் முதலமைச்சர். எனவே இந்தி இப்போது இருந்தே கூட கற்றுக் கொண்டு இருந்தாலும் இருப்பார். வேண்டும் என்றால் சொல்லுங்கள் எனக்கு இந்தி தெரியும் உங்களுக்கு இந்தி கிளாஸ் எடுக்கிறேன். இந்தி எப்படி எழுத வேண்டும் படிக்க வேண்டும் என்று நான் சொல்லி தருகிறேன்.

அடுத்த முறை ஆட்சியை பிடிக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கள் எல்லாருடைய பெயரிலும் வழக்கு பதிவு செய்யுங்கள். ஒரு குரல் கொடுத்தால் அடங்கி உட்காருபவர்கள் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது எப்படி உண்மையான ஆட்சி செய்ய வேண்டும்; ஊழல் இல்லாத ஆட்சி, மக்கள் சேவை குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இதை எல்லாம் பிரதமரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என குஷ்பூ பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Arivazhagan Chinnasamy

தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Vandhana

கோவிட் -19: நாடுமுழுவதும் 10,000 நிறுவனங்கள் மூடல்!

Jeba Arul Robinson