டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்; நாம் தமிழர் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சுழி அருகே அரசு டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டடனர்.  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அடுத்து பரளச்சி வாகைக்குளம் பகுதியில் விளை நிலத்திற்குள் டாஸ்மாக்…

திருச்சுழி அருகே அரசு டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டடனர். 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அடுத்து பரளச்சி வாகைக்குளம் பகுதியில் விளை நிலத்திற்குள் டாஸ்மாக் கடையை திறப்பை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பலமுறை போரட்டம் நடத்தி வந்துள்ளனர். இதை தொடர்ந்து பரளச்சி வாகைக்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்துள்ளது.  இந்நிலையில் இன்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.  டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டு உள்ளனர்.

இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதை தொடர்ந்து அரும்பு கோட்டை  ASP கருண் காரட் மற்றும் திருச்சுழி டி. எஸ். பி ஜெகநாதன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் மறியலில் பொது மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

இதை அடுத்து காவல்துறையினர் அனுமதியின்றி போரட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். பின்னர் பரளச்சி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடந்துள்ளது.  டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.