அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தோற்றுவிக்கவும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மாநிலம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், புதிய கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் நிதிப்பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளதாக தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘தேர் விபத்து; நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்’
நடப்பு கல்வியாண்டிலும், வரும் கல்வியாண்டிலும் பல புதிய கல்லூரிகளையும், புதிய படிப்புகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்திருப்பதாகவும், வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள், புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கித்தர வேண்டி முதலமைச்சரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி படிப்புகளை அங்கீகரிக்குமாறு UGC-க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








