பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத்…

தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதையடுத்து ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை கடந்த ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்.

இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் விவகாரம், காயத்ரி ரகுராம் விவகாரம், உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.