பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஆண்டு ஏப்ரலில் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். 2026 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். மேலும் கட்சியில் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையில் அண்ணாமலை புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகின. தகவல்களின் படி, அக்கட்சிக்கு ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி டெல்லி சென்ற அண்ணாமாலை அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தொடர்ந்து அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடித்தினார்.
இந்த நிலையில் அண்ணமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.






