திருமாவளவனை விவாதத்திற்கு அழைக்கும் அண்ணாமலை

அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாரதிய ஜனதா கட்சி விளங்கி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது…

அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாரதிய ஜனதா கட்சி விளங்கி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு காரணமான பாஜகவினரை கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திருமாவளவனுக்கு கடிதம் எழுதியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதில்,   “அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாஜக இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறது, எத்தனை காலம் மக்களை உங்களுடைய பொய் புரட்டுகளை வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தொண்டர்களை விசிகவினர் தாக்கியது எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தாலும் கூட, உங்களுடைய தொண்டர்கள் தவறான வழிகாட்டுதலின் பால் அதை செய்கின்றார்கள் என்றும் எனக்கு தெரியும் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை; நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்தது என்றார்.

நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, சொல்லுகின்ற இடத்திலே தமிழ்நாடு பாஜக சார்பாக, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாஜக இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி பிரதமர் மோடி அவருடைய வாழ்க்கையை அம்பேத்கர் வகுத்து கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன், இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள் என்று திருமாவளவனுக்கு சவால் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.