பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுத்து காலில் விழுந்தார். உடனே பதிலுக்கு அண்ணாமலையும் அவரின் காலில் விழுந்து, அவரை தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார்.
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை என மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் விலையை ஏற்றியுள்ளது. இதில் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனை கண்டித்து தமிழக பாஜக மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அந்த பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் தாரைக்கரை பகுதிக்கு சென்றார். அப்போது மலைவாழ் மக்களில் உள்ள சோளகர், லிங்காயத்து, இந்து மழையாளி என்ற சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்து மழையாளி என்ற சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்தார். பதிலுக்கு அவரது காலில் திரும்ப விழுந்து கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்த வரை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறி இனி வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் போது உங்களது கோரிக்கை நிறைவேற்றபடும் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவு சாப்பிட்டார். பின்பு அங்கே உள்ள மலைவாழ் மக்களுடன் புகைபடம் எடுத்து கொண்டு சென்னை
திரும்பினார்.