ஐபிஎல் 2023; சென்னை, மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு விவரம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின்…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

ஐபில் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாகவே கருதப்படுகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளில் தங்களின் விருப்பமான வீரர்கள் இடம் பெறுவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஐபில் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற விவரத்தை அனைத்து அணிகளும் இன்றைக்குள் சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிகள் தாங்கள் விடுவித்த மற்றும் அணியில் இடம் பெறும் வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

https://twitter.com/ChennaiIPL/status/1592501074342350850

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டான்சிங் ரோஸ் என்றழைக்கப்படும் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ராபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

https://twitter.com/mipaltan/status/1592501981700296704

மேலும், கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.