“அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு

சென்னை மன்னடியில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், “ஆகம விதிப்படி…

சென்னை மன்னடியில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் நிறைவுபெற்ற கோயில்களில் உடனடியாக குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ளும் விதமாக மன்னடியில் உள்ள கச்சாலீஸ்வரர் திருக்கோயிலை ஆய்வு செய்தோம். தமிழ்நாடு முழுவதும் 80 திருக்கோவிலுக்கு மேல் ஆய்வு செய்து, 10 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நிறைவு பெறாத நிலைகளையும் கணக்கிட்டுள்ளோம். கோவில் நிலங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து அதன் வருவாயை கோயிலுக்கு பயன்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.”

 

“அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. முறையாக ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்றவர்களை மூத்த குருக்கள் கீழ் தேர்வு நடத்தப்பட்டு சட்டப்படி நியமிக்க வழிவகை செய்யப்படும். தனியார் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்துதான் ஆக வேண்டும். அதுபோல் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “அரசாங்கத்தில் இருந்தபோது மடைமாறி சென்றவர்களையும் சரி செய்ய வேண்டியது அரசின் கடைமை.” என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.