நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியில், 1989 முதல் 2006 ஆம் ஆண்டு வரை முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவராக விளங்கியவர் கிறிஸ் கெய்ன்ஸ். 62 டெஸ்ட் போட்டி, 215 ஒருநாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள கெயின்ஸ் பல்வேறு போட்டிகளில் நியூசிலாந்து வெல்ல காரணமாக விளங்கியவர்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இவர், லாரி பணிமனைகளையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த கிறிஸ் கெயின்ஸ், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கான்பெர்ரா மருத்துவமனையில்
அவரை சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு ஏற்கனவே சில அறுவை சிகிச்சைக்கள் செய்யப்பட்டு உள்ளதால், இப்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.








