ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல் கத்தா பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. டி.இமான் இசையமைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
#AnnaattheMotionPoster
Arangam mulukka therikka therikka!https://t.co/qgiTJtxDr5@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @prakashraaj @immancomposer @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali— Sun Pictures (@sunpictures) September 10, 2021