முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் விவேக்கின் இடத்தை நிரப்பும் பொறுப்பு எனக்கு இருக்கிறது – வடிவேலு

நடிகர் விவேக்கின் மறைவு பெரும் வேதனையை தந்தாகவும், அவரது இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து சென்னை தியாகராய நகரில் நடிகர் வடிவேலு மற்றும் இயக்குநர் சுபாஷ்கரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் வடிவேலு, கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி தனது மனதை தேற்றிக் கொண்டதாக தெரிவித்தார்.

தனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும் என தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தபிறகு தன் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாகவும் கூறினார். முன்பு நடித்ததை விட இனி பிரமாண்டமாக நடிப்பேன் என தெரிவித்த அவர், புதிதாக நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விவேக் என் அருமையான நண்பன், அவரது மறைவு பெரும் வேதனையை தந்தது எனவும், அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது எனவும் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

Gayathri Venkatesan

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன் 

Ezhilarasan

உதவி கிடைக்கவில்லை: பிரபல நடிகையின் சகோதரர் உயிரிழப்பு!

Halley karthi