அண்ணா பல்கலைக்கழக புதிய பாடத்திட்டம்: எப்போது அமலாகும்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அகாடமிக்கு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். உரியக் கட்டமைப்பு இல்லாத 18 கல்லூரிகளும் இரண்டு வாரங்களுக்குள் சரி செய்து கொண்டால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்…

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அகாடமிக்கு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

உரியக் கட்டமைப்பு இல்லாத 18 கல்லூரிகளும் இரண்டு வாரங்களுக்குள் சரி செய்து கொண்டால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் : துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி.

75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் அண்ணா பல்கலைகழக்கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாகச் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கதர் பொருட்கள் கண்காட்சியினை பல்கலைக்கழக துணை  வேந்தர் ‘வேல்ராஜ்’  துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணா பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்த கண்காட்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. அப்படி மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அவர்களை தடுக்க வேண்டும்.

மேலும் அவர் பேசுகையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாளை நடைபெறும் அகாடமிக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தைத் தாண்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவது போன்றவை குறித்த புதிய அம்சங்கள் இடம் பெறும் என்றும்,

உரியக் கட்டமைப்பு வசதிள் இல்லாத்தால் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட 18 கல்லூரிகளுக்கும் இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் கல்லூரிகள் தங்கள் கட்டமைப்புகளைச் சரி செய்து கொண்டால், அவர்களுக்கு மீண்டும் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பு வழங்கப்படும்”, என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.