ஆளுநர் மாளிகையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – கே.எஸ்.அழகிரி

ஆளுநர் மாளிகையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின்…

ஆளுநர் மாளிகையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா
நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து 75வது சுதந்திர தின பாதயாத்திரையை தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம், கடைவீதி, பழைய பாப்பாரப்பட்டி வரை பாதயாத்திரையாக நடந்து சென்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தன்னிச்சையாக அனைவரின் இல்லங்களிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பாஜக ஆளும் சில மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பணம் கொடுத்து தேசியக்கொடி வாங்க வேண்டும் இல்லை என்றால் பொருட்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என்று கூறுவது ஏற்புடையதல்ல. எங்கு அரசியல் பேசலாம், எங்கு பேசக்கூடாது என்று விதிவிலக்கு உள்ளது.

ஆளுநர் மாளிகைக்குள் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது, ஆளுநர்
மாளிகைக்கு என்று சில மரபுகள் இருக்கின்றன. கரும்பு, நெல், கோதுமை பயிர்களை
போன்று புன்செய் பயிர்களான எண்ணெய் வித்துகளுக்கும் அடிப்படை ஆதார விலை
நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என
தெரிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.