”இனிதான் ஆரம்பம்”: ஜெயிலர் படம் குறித்து அனிருத் மாஸ் ட்விட்

காவல் நிலையம் போல் செட் அமைத்து அதில் ரஜினி பங்கு பெறும் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…

காவல் நிலையம் போல் செட் அமைத்து அதில் ரஜினி பங்கு பெறும் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 22) பூஜையுடன் தொடங்கியது. சால்ட் & பெப்பர் லுக்கில் இருக்கும் ரஜினியின் ஜெயிலர் பட புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிட்டுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் ஷேர் செய்து “இனிதான் ஆரம்பம்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெறும் வரவேற்பை பெற்ற நிலையில், அனிருத்தின் இந்த ட்விட்டர் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.ஏற்கனவே வெளியான ஜெயிலர் டைட்டில் லுக்கில் ரஜினிகாந்தின் தோற்றம் இடம்பெறாத நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரஜினி இடம் பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 22) நடந்த படப்பிடிப்பில் காவல் நிலையம் போல் செட் அமைத்து அதில் ரஜினி பங்கு பெறும் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.