ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அதிகாரியாக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி…

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது.

இந்த குழுவின் அதிகாரியாக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ள இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு உறுப்பினர்கள், விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளில் விதிகள் மீறப்பட்டால், இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் அக்குழு அறிக்கை அளிக்கும் என்றும், இந்த குழு செயல்படுவதற்கு கால்நடைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply