இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம்; சீனாவுக்கு ராணுவத் தலைமை தளபதி நரவானே எச்சரிக்கை!

இந்தியாவின் பொறுமையை சோதனை செய்ய வேண்டாம் என சீனாவுக்கு ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய விடுதலைக்குப் பிறகு ராணுவத்தின் முதல் தலைமை தளபதியாக 1949 ஆம் ஆண்டு…

இந்தியாவின் பொறுமையை சோதனை செய்ய வேண்டாம் என சீனாவுக்கு ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு ராணுவத்தின் முதல் தலைமை தளபதியாக 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கே.எம் கரியப்பா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இந்திய ராணுவதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் 73 வது ராணுவ தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இதில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ராணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, எல்லை பகுதியில் தன்னிச்சையாக மாற்றம் ஏற்படுத்த சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வீரமரணமடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதிபூண்டுள்ளோம். அதேநேரத்தில், இந்தியாவின் பொறுமையை சோதித்து தவறை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply