ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் ராகுல்காந்தி… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வர உள்ளதையொட்டி, அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்…

அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வர உள்ளதையொட்டி, அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை, காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி பார்வையிடவுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை மதியம் 12:30 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக அவனியாபுரம் செல்கிறார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் இடத்தில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் 2000-க்கு மேற்பட்ட போலீசார், அவனியாபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply